Tuesday, August 17, 2021

Parisutha kaihaLai uyarthi | பரிசுத்த கைகளை உயர்த்தி

பரிசுத்த கைகளை உயர்த்தி நேராய்
Parisutha kaihaLai uyarthi nEraai
பரிசுத்த உள்ளதோடு ஆராதிப்பேன் -2
parisutha uLLathOdu aarathippaEn -2

  ஆராதிப்பேன் -4
  aaraathippaEn (4)
  பரிசுத்த கைகளை உயர்த்தி நேராய்  -2
  Parisutha kaihaLai uyarthi naEraai -2

துதியும் புகழும் உம்மைக்கு தானே
Thuthiyum puhazhum umakku thaanaE
மகிமையும் மாட்சிமையும் உம்மைக்குத்தானே  -2
Mahimayum matchimaiyum umakkuthaanaE -2

எனது வாஞ்சையும் எனது தாகமும்
Enathu vaanjaiyum enathu thaahamum
எனது ஆசையும் எல்லாம் நீரே  -2
Enathu aasaiyum ellaam neeraE -2




Tuesday, August 11, 2020

Velaikaaran Kangal | வேலைக்காரன் கண்கள்

வேலைக்காரன் கண்கள் - தன் எஜமான் கரம் நோக்கும் தேவா எனக்காய் எல்லம் செய்யும் உம் கரத்தை என்றும் நோக்குவேன் நீதியின் வலது கரம் நீதிமானை என்றும் தாங்கிடுமே விழுகையில் வியாதியின் நேரங்களில் வழுவாது உம் கரம் தாங்கிடுமே கடலும் ஆறும் தடையில்லை ஆண்டவர் கரம் என்னோடிருந்தால் தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன் சத்துவமுள்ள உந்தன் கரம் நித்தம் காத்து வழி நடத்திடுமே உம் கரம் பற்றியே என்றுமே நான் பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே


Vazhthugiren Yesu Nadha | வாழ்த்துகிறேன் இயேசு நாதா

வாழ்த்துகிறேன் இயேசு நாதா வாழ்த்துகிறேன் இக்காலையிலே வாழ்த்துகிறேன் இயேசு நாதா வாழ்த்துகிறேன் இவ்வேளையிலே அற்புதமாய் இரா முழுதும் அடியேனைக் காத்தீரே 1. உமது செட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுதும் உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் 2. நித்திரையை இன்பமாக்கி பத்திரமாய் இருதயத்தை சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருந்தீர் 3 .பலவிதமாம் சோதனைகள் எமை சூழச் வந்திருந்தும் ஒன்றும் எமை அணுகிடாமல் அன்புடனே பாதுகாத்தீர் 4 சந்தீப்பீரே இக்காலைதனில் தந்திடவே திருவரங்கள் சந்தோஷமாய்ப் பகல் முழுதும் ஆவிகுள் யான் பிழைக்க 5 தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புது நாளில் நடத்திடுவீர் ஆவியினால் உமது திருச் சித்தமதில் 6 பாவமென்றும் அணுகிடாமல் பரிசுத்தமாம் பாதை செல்ல தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் 7 படைக்கிறேன் என் இருதயத்தை பலிபீடத்தில் முற்றுமாக கண்களுடன் செவியோடு வாயும் கையும் காலுமாக 8. நேசரே உம் திருவருகை இந்நாளில் இருந்திடினும் ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்



Wednesday, December 11, 2019

என்னை கழுவும் உம் ரத்தத்தாலே | Ennai Kazhuvum Um Raththathaale


என்னை கழுவும் உம் ரத்தத்தாலே
சுத்திகரியும் உம் ஆவியாலே - 2

    
    என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
    சுத்திகரியும் நான் தூய்மையாவேன் - 2
    உம்மை போல் என்னை மாற்றிடும் - 4


என்னை தள்ளாதிரும்
சுத்த ஆவியே விலகாதிரும் - 2
பரிசுத்த இருதயம் எனில் தாருமே
நிலைவர ஆவியை புதுப்பியுமே - 2
                 - என்னை கழுவும்

என் பாவங்கள் எண்ணாதிரும்
என் அக்கிரமங்கள் நீக்கியருளும் (2)
கிருபையினால் எனக்கு இறங்கிடும்
இரக்கத்தினால் என்னை மண்ணித்தருளும் - 2
                 - என்னை கழுவும்

என் உதடுகள் திறந்தருளும்
உம் புகழை நான் அறிவித்திட  - 2
இரட்சிப்பின் சந்தோசத்தை
திரும்ப தாரும் உற்சாக ஆவி
என்னை தாங்க செய்யும் - 2

                 - என்னை கழுவும்


இஸ்ரவேலின் துதிகளுக்குள் என்றும் | Isravelin Thuthikalukkul endrum

இஸ்ரவேலின் துதிகளுக்குள் என்றும் வாசம் செய்பவரே
உம்மை நம்பிவந்த யாவருக்கும் என்றும் நன்மைகள் செய்பவரே (2)

    உம்மை என்றென்றுமே என்றென்றுமே பாடி புகழ்ந்திடுவோம்
     உம்மை எந்நாளுமே எந்நாளுமே ஆராதனை செய்குவோம் (2)

     ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
     அல்லேலுயா அல்லேலுயா துதி மகிமை உமக்கே (2)

ஆண்டாண்டு காலங்கலாய் உம் கிருபையால் காத்துவந்தீர்
தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமாய் வந்தீர் (2)

                           -- உம்மை என்றென்றுமே

மாறாவின் கசப்புகளை நீர் மதுரமாய் மாற்றிவிட்டீர்
எங்கள் உள்ளத்தில் ஜுவ நதி பெரு வெள்ளம் போல் பாயச்செய்தீர் (2)

                           -- உம்மை என்றென்றுமே

வாக்களித்த தேசங்களை நாங்கள் உம்மாலே சுதந்தரிப்போம்
இந்த பூமியின் இறுதிவரை இயேசு நாமத்தை உயத்திடுவோம் (2)

                           -- உம்மை என்றென்றுமே



Saturday, August 18, 2018

துயரத்தில் கூப்பிட்டேன் | Thuyarathil koopitaen - Fr. S. J. Berchmans



துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டிரையா
குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால்

குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்
(குனிந்து தூக்கினீரே)

எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவை பகலாக்கினீர்
எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை

எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
(எரிந்து கொண்டேயிருப்பேன்)

நான் நம்பும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா
தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானய்யா

தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானய்யா
(தூயவர் தூயவரே)

சேனைக்குள் பாய்ந்தேன்
உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன்
புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்

புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
(புகழ்ந்து பாடிடுவேன்)




உங்க கிருபை | Unga Kirubai - Benny Joshua


என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
நீர் இல்லாமல் நான் இல்லையே -2


நான் வாழ்ந்தது உங்க கிருபை
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே -2

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல -2
கதறி அழுத நேரத்தில்
என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2

உங்க கிருபை வேண்டுமே

நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல -2
தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2

உங்க கிருபை வேண்டுமே